ADDED : ஆக 06, 2026 08:22 PM
: புதுச்சேரி: வைத்திக்குப்பத்தில் சாலை மறியல் செய்தது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவ கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, குடியிருப்பு கட்டுவதற்கு அப்பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து எஸ்.வி., பட்டேல் சாலை – ஆம்பூர் சாலை சந்திப்பில் மீனவர்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் செய்தனர்.
மறியல் செய்த மீனவர்களுக்கும், பெரியக்கடை போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மறியல் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, வைத்திக்குப்பத்தை சேர்ந்த சுப்ரமணி, திலீபன், செந்தமிழ், சுமன், மனோகர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
