/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்று மணல் திருட்டு ஒருவர் மீது வழக்கு
/
ஆற்று மணல் திருட்டு ஒருவர் மீது வழக்கு
ADDED : மார் 01, 2025 04:30 AM
திருக்கனுார் : ஆற்று மணல் கடத்தி வந்து, வீட்டில் கொட்டி வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோரம், மணல் திருடப்பட்டு வருவதாக, திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், நேற்று அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.
செல்லிப்பட்டு முருகன் நகரில் உள்ள ஒரு வீட்டு மனையில், ஆற்று மணல், வாகனம் மூலம் கடத்தி வரப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் திருடி வந்ததாக, செல்லிப்பட்டை சேர்ந்த மூர்த்தி, 47; மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.