/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொத்து தகராறில் வீடு இடிப்பு 100 பேர் மீது வழக்குப் பதிவு
/
சொத்து தகராறில் வீடு இடிப்பு 100 பேர் மீது வழக்குப் பதிவு
சொத்து தகராறில் வீடு இடிப்பு 100 பேர் மீது வழக்குப் பதிவு
சொத்து தகராறில் வீடு இடிப்பு 100 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : செப் 17, 2024 04:20 AM
பாகூர், : கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனை எதிரே உள்ள நிலம் சம்பந்தமான உரிமை பிரச்னை இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
அந்த நிலத்தில் பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த ஜோதிசெந்தில் கண்ணன் என்பவரின் தங்கை அகிலா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 100க்கும் மேற்பட்ட ஒரு கும்பல், பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்று பாதுகாப்பு முள்வேலிகளை இடித்து தள்ளி உள்ளே நுழைந்து வீட்டையும் இடித்ததுடன், அங்கிருந்த பொருட்களையும் சூரையாடினர்.
இதுகுறித்து ஜோதிசெந்தில்கண்ணன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் ஐந்து பேரை பிடித்தும், இரண்டு பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.