தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறையில் கைதியை தாக்கிய ரவுடி மீது வழக்குப் பதிவு

சிறையில் கைதியை தாக்கிய ரவுடி மீது வழக்குப் பதிவு

சிறையில் கைதியை தாக்கிய ரவுடி மீது வழக்குப் பதிவு


ADDED : ஜூன் 11, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை கைதியை தாக்கிய ரவுடி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், சிறை அதிகாரிகள் கடந்த 9ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.

விசாரணை கைதிகள் அறையில், மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரவுடியான ரங்கராஜ் (எ) புளியங்கொட்டை மறைத்து வைத்து பயன்படுத்திய மொபைல் போனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரங்கராஜ், தான் மொபைல் பயன்படுத்துவதை தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதியான அமோல் தான், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை ரங்கராஜ் கடுமையாக தாக்கினார்.

அமோல் அலறல் சத்தம் கேட்டு, சிறை அதிகாரிகள் விரைந்து சென்று, அமோலை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், ரங்கராஜ் மீது காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம்  மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ரங்கராஜ் மீது கொலை, கொலை முயற்சி, அடித்தடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us