ADDED : ஜூன் 11, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: அரசு பள்ளி சத்துணவு முட்டையை விற்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு முட்டைகள் முறைகேடாக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசு கொடுக்கும் முட்டைகளை ஓட்டலில் விற்பனை செய்ததற்காக, பள்ளியில் வேலை செய்த சத்துணவு மைய அமைப்பாளர் அருணாச்சலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர், இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
