/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்களிடம் ஜாதி பார்ப்பதா? சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு
/
அரசு பள்ளி மாணவர்களிடம் ஜாதி பார்ப்பதா? சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு
அரசு பள்ளி மாணவர்களிடம் ஜாதி பார்ப்பதா? சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு
அரசு பள்ளி மாணவர்களிடம் ஜாதி பார்ப்பதா? சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 08, 2024 11:03 PM
புதுச்சேரி: அரசு பள்ளியில் ஜாதி பார்க்க கூடாது. அனைத்து குழந்தைகளையும் சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
புதுச்சேரி பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிடர் குழந்தைகள் சுற்றுலா செல்லும் செலவை அரசு ஏற்கும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
அரசின் இந்த முடிவிற்கு சட்டசபையில் நேற்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பிரகாஷ்குமார் (சுயேச்சை): புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் சுற்றுலா செல்ல செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் வேறுபாடு பார்க்க கூடாது. அனைத்து மாணவர்களையும் தான் சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும்.
கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): பள்ளிகளில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காக தான் ஒரே மாதிரியான சீருடை கொடுத்துள்ளோம். அப்படி இருக்கும்போது சுற்றுலா என்ற பெயரில் மீண்டும் மாணவர்களிடம் சாதி பார்க்க கூடாது. தாழ்த்தப்பட்ட மாணவர்களை தனியாக அழைத்து சென்றால் அம்மாணவர்களை பிரித்து காட்டும். இந்த பிரிவினை கூடாது.
சபாநாயகர் செல்வம்: முதல்வர் கவனத்தில் எடுத்துகொள்வார்.
நேரு (சுயேச்சை): சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்திற்கு நிதி இல்லையென்றால், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான நிதியில் இருந்து பிற மாணவர்களையும் அழைத்து செல்லலாம்.
வைத்தியநாதன்(காங்.,): பள்ளி மாணவர்களிடம் பிரிவினை காட்டுவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.
செந்தில்குமார் (தி.மு.க.,)-: அதேபோல் டேப்லெட் தருவதிலும் இதை பின்பற்றுங்கள்.
சபாநாயகர் செல்வம்: முதல்வருடன் கலந்து பேசி அனைத்து மாணவர்களும் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படும். மானியக்கோரிக்கையில் முதல்வர் பதில் சொல்வார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.