ADDED : மே 13, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: தனிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், நாகாத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் திருவிழா இன்று மாலை 3.00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 8.00 மணிக்கு ஊரல் குளக்கரையில் கரகம் அலங்கரித்து ஊர்வலம் நடந்தது. மதியம் 2.00 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு கும்பம் படைக்கப்பட்டது.
இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை தனிக்குப்பம் கிராம மக்கள் செய்துள்ளனர்.