/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காவிரி நீர் ஒழுங்காற்று குழு காரைக்காலில் ஆய்வு
/
காவிரி நீர் ஒழுங்காற்று குழு காரைக்காலில் ஆய்வு
ADDED : மார் 25, 2024 05:09 AM

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினர் முக்கிய இடங்களில் நீர் அளவீடு மற்றும் வெளியேற்றும் நிலையங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தலைமை செயலகத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 94வது கூட்டம், கடந்த 21ம் தேதி நடந்தது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் வினித்குப்தா தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயலர் கேசவன் வரவேற்றார்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் செயல் உறுப்பினர் சர்மா, இயக்குனர் மோகன் முரளி மற்றும் தமிழக தலைமை பொறியாளர் சுப்ரமணியன், கர்நாடக தலைமை பொறியாளர் மகிஷா, கேரளா தலைமை பொறியாளர் பிரியேஷ், புதுச்சேரி தலைமை பொறியாளர் வீரசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று, காவிரி நதி நீர் பங்கீடு குறித்து விவாதித்தனர்.
அதை தொடர்ந்து நேற்று முன்தினம் காரைக்கால் மாவட்டத்தில் மத்திய நீர் ஆணையத்தின் நீர் அளவீடு மற்றும் வெளியேற்றும் நிலையங்களை காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேலும், தமிழக பகுதியான பேரளம் வாஞ்சியாற்றில் அமைந்துள்ள மத்திய நீர் ஆணையத்தின் நீர் அளவீடு மற்றும் வெளியேற்றும் நிலையம், தென்குடி கிராமம் திருமலைராஜனாற்றில் அமைந்துள்ள நீர் அளவீடு மற்றும் வெளியேற்றும் நிலையத்தை ஆய்வு செய்தனர்.

