நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை செடல் உற்சவம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர், கார், பஸ், டிராக்டர் உள்ளிட்ட வாகனங் களை அலகு குத்தி இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.