/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பல திட்டங்களுக்கு நிதி அளிக்க மத்திய அரசு தயார்; முதல்வர் ரங்கசாமி தகவல்
/
புதுச்சேரியில் பல திட்டங்களுக்கு நிதி அளிக்க மத்திய அரசு தயார்; முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரியில் பல திட்டங்களுக்கு நிதி அளிக்க மத்திய அரசு தயார்; முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரியில் பல திட்டங்களுக்கு நிதி அளிக்க மத்திய அரசு தயார்; முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : பிப் 25, 2025 04:41 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பல திட்டங்களுக்கு நிதி கொடுக்க மத்திய அரசு காத்திருக்கிறது என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த விவசாயிகள் கவுரவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலனுக்கு பல திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து கொடுத்து வருகிறார். பயிரிட்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பது சாதாரண விஷயமில்லை. இது விவசாயி குடும்பத்திற்கு நன்றாக தெரியும். விவசாயிகளுக்கு பல பிரச்னைகள் உள்ளது. லாபமும் பெரிய அளவில் கிடைக்காது. இதனால் கரும்பு, தென்னை போன்ற பண பயிரிட்டு லாபம் ஈட்ட வேண்டும் என, கூறுகின்றனர். இதற்கு அரசு உதவி செய்கிறது.
பயிரிட்டால் லாபம் கிடைக்கவில்லை என்பதால், விவசாய நிலங்கள் மனைகளாக மாறுகிறது. விவசாயம் மூலம் உணவு உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் மற்றவர்கள் பசியில்லாமல் இருக்க முடியும்.
விவசாயிகளை நாம் மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 கோடி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி விவசாயிகளுக்கு ரூ.33 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. இது விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் திட்டம்.
மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரசாயன உரம் இன்றி உணவுபொருள் உற்பத்தி செய்ய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு பல திட்டங்களுக்கு நிதி கொடுக்க மத்திய அரசு காத்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.