/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீரருக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ்
/
சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீரருக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ்
சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீரருக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ்
சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீரருக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ்
ADDED : ஆக 17, 2024 02:45 AM
புதுச்சேரி: சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறன் கொண்ட புதுச்சேரி பளு தாக்குதல் வீரர் விஷால் முதல்வரின் பாராட்டு சான்றிதழ் அறிவிக்கப்பட்டது.
விருதினை முதல்வர் ரங்கசாமி வழங்கி பாராட்டினார். இவர் சர்வதேச மற்றும் தேசிய, மாநில அளவிலான பளு துாக்குதல்(பவர் லிப்டிங்) போட்டியில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 2023ம் ஆண்டில் ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் பளு துாக்குதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். தேசிய அளவிலான பவர் லிப்டிங்கிங் போட்டியில் சாதித்ததற்காக இந்தியாவின் சிறப்பு வலிமை மனிதன் என்ற பட்டத்தை பெற்றார். விளையாட்டு துறையில் சாதித்ததற்காக பளு துாக்குதல் வீரரர் விஷாலுக்கு முதல்வரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமூக சேவை:
தன்னம்பிக்கை கலைக் குழு மூலம் குழந்தைகள், மாற்றுதிறனாளிகள், திருநங்கைகள், மூத்த குடிமக்களுக்கு சமூக சேவையாற்றி வரும் சமூக சேகவி எலிசபெத் ராணிக்கும், பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கைகொடுத்து வரும் புதுச்சேரி ரிவேஜ் ரவுண்ட் டேபிள்-104 அமைப்பிற்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆம்புலன்ஸ், சுகாதார உதவிகள், இலவச கண் பரிசோதனை, பல பரிசோதனைகள், கிராமப்புற பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல் போன்ற சமூக பணிகளை மேற்கொண்டதற்காக இந்த அமைப்பிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

