நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்:நல்லவாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், தேர் திருவிழாவை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மகோற்சவ விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 27ம் தேதி முதல், கடந்த 2ம் தேதி வரை சாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. 3ம் தேதி, ரணகளிப்பு நிகழ்ச்சியும், முக்கிய விழாவான நேற்று முன்தினம், மயானக் கொள்ளை மற்றும் தேர்திருவிழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், விழாவை துவக்கி வைத்தார். அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.