/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் தேரோட்டம்
/
மணக்குள விநாயகர் கோவிலில் தேரோட்டம்
ADDED : ஆக 18, 2024 11:25 PM

புதுச்சேரி: நகரின் முக்கிய வீதிகள் வழியாக மணக்குள விநாயகர் தேரோட்டம் நடந்தது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் 64ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. மணக்குள விநாயகர் புறப்பட்ட தேர், நேரு வீதி, சின்னசுப்ராயபிள்ளை வீதி, அம்பலமடத்தார் வீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று 19ம் தேதி காலை 7:00 மணிக்கு நர்த்தன கணபதி தேரடி உற்சவம், நாளை 20ம் தேதி காலை 8:00 மணிக்கு கடல் தீர்த்தவாரி முடிந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து 31ம் தேதி வரை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடக்க உள்ளது. அடுத்த மாதம் 1ம் தேதி மதியம் 12:00 மணிக்கு 108 சங்காபிேஷகம் நடக்கின்றது.