
புதுச்சேரி: மாசிமக தீர்த்தவாரி திருவிழாவையொட்டி, உருளையன்பேட்டை போத்தீஸ் ஆட்டோ ஸ்டாண்ட் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், தி.மு.க., அமைப்பாளர் சிவா, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், போத்தீஸ் பொது மேலாளர் பாலமுருகன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பாபு, தொண்டரணி துணை அமைப்பாளர் சேட்டு, கிளைச் செயலாளர் அகிலன், துணை செயலாளர் வைரவேல், தமிழ்ச்செல்வன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, கணேசன் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அண்ணா சாலை குமரகுருப்பள்ளம் சந்திப்பில் தி.மு.க., தலைவர் 72வது பிறந்த நாள் விழா மற்றும் மாசிமக திருவிாழவையொட்டி, தி.மு.க., வர்த்தகர் அணி துணை தலைவர் சண்முகசுந்தரம், தொண்டரணி அமைப்பாளர் வீரய்யன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.