/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்கன்வாடியில் சத்துமாவு, சுண்டல் நிறுத்தம் 25ம் தேதி சட்டசபை முற்றுகை அறிவிப்பு

ADDED : ஜூலை 24, 2024 06:25 AM
புதுச்சேரி: அங்கன்வாடிகளில் 9 மாதமாக சத்துமாவு, 3 மாதமாக சுண்டல்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கன்வாடி ஊழியர்கள் சங்க தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் தமிழரசி கூறுகையில், 'அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு மாத இறுதியில் ஊதியம், 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்த வேண்டும். 6வது ஊதிய குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 50 சதவீத ஊதியம், மூன்றாண்டு பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி பல கட்ட போராட்டம் நடந்தது.
துறை செயலரிடம் நடந்த பேச்சுவார்த்தையில், 7 வது ஊதிய குழு பரிந்துரை அமல், டி.ஏ., நிலுவை தொகை, வாடகை, காய்கறி, விறகு தொகை உள்ளிட்டவை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் டி.ஏ., நிலுவை தொகையை தவிர மற்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்படுகிறது.
புதுச்சேரியில் 855 அங்கன்வாடிகள் உள்ளது. இதில் பல அங்கன்வாடிகளில் ஊழியர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் பூட்டி கிடக்கிறது.அங்கன்வாடி மூலம் கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு கடந்த 9 மாதங்களாக வழங்கப்படவில்லை. அதுபோல் கடந்த 3 மாதங்களாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் சுண்டலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாளை மறுநாள் 25ம் தேதி சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார்.