செல்லிப்பட்டு அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை
செல்லிப்பட்டு அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை
ADDED : ஆக 05, 2026 06:12 PM
புதுச்சேரி: செல்லிப்பட்டு அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்லிப்பட்டில், கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. துவக்கம், நடுநிலை பள்ளியாக இருந்து தற்போது, உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் செல்லிப்பட்டு, விநாயம்பட்டு, கலித்தரம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில், இருபதுக்கும் மேற்பட்ட குழு மற்றும் தனித்திறன் விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும், இப்பள்ளிக்கென தனியாக விளையாட்டு மைதானம் இல்லை.
இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் விளையாட்டு திறமையை வெளிப்படுத்த முடியாமல் மன, உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆண்டு விளையாட்டு போட்டிகள் மட்டும் ஊர் பொது மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. விளையாட்டுக்கென ஆசிரியர் இருந்தும், மாணவர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை முழுமையாக இழந்து விட்டனர்.
இங்கு பயிலும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, போட்டிகளில் வென்று ஸ்போர்ட்ஸ் கோட்டாவில், அரசு வேலை பெறும் வாய்ப்பையும் இழக்கும் நிலை தொடருகிறது.
எனவே செல்லிப்பட்டு, பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி, மாணவர்களின், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பை கல்வித் துறை ஏற்படுத்தி தர வேண்டும்.
