ADDED : ஆக 05, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த உத்திரவாகினிபேட் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முகிலன். தனியார் வங்கி கலெக் ஷன் ஏஜன்ட். இவரது மனைவி சுபாஷினி, 28. இவர் கடந்த 2ம் தேதி இரவு 10:30 மணியளவில் வீட்டின் அருகே நடந்து சென்றார். இருட்டில் சாலையோரம் நின்றிருந்த இருவர் சுபாஷினி தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். அதில், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 4 கிராம் தங்க காசு மற்றும் நாணல் இருந்தது.
இது குறித்து சுபாாஷினி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.
