/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப்பதிவின்போது 76 இயந்திரங்கள் மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
/
ஓட்டுப்பதிவின்போது 76 இயந்திரங்கள் மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
ஓட்டுப்பதிவின்போது 76 இயந்திரங்கள் மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
ஓட்டுப்பதிவின்போது 76 இயந்திரங்கள் மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
ADDED : ஏப் 20, 2024 05:20 AM
புதுச்சேரி, : ஓட்டுப் பதிவின்போது 76 இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலின்போது மாதிரி ஓட்டுப்பதிவின்போது, 9 பேலட் யூனிட், 8 கண்ட்ரோல் யூனிட், 28, வி.வி.பாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இதேபோல் ஓட்டுப்பதிவின்போது 10 பேலட் யூனிட், 5 கண்ட்ரோல் யூனிட், 16 விவிபாட் மாற்றம் செய்யப்பட்டன.
பழுதான அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் உடனுக்குடன் மாற்றப்பட்டு ஓட்டுபதிவு, சுமூகமாக நடந்தது.
பாரம்பரிய ஓட்டுச்சாவடியில் பதனீர், கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டதும், பிளாஸ்டிக்கை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வும் வாக்காளர்களை கவர்ந்தது. இதேபோல் கார்பன் உமிழ்வை தவிர்க்க நடந்து சென்று ஓட்டளிப்போம் என்று 9363831950 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்த அறிவிப்பும் வாக்காளர்களிடம் பெரிதும் வரவேற்பு கிடைத்தது.
இதேபோல் 967 ஓட்டுச்சாவடிகளிலும் திடகழிவு மேலாண்மை விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. ஓட்டுபதிவுவையொட்டி, ஓட்டுச்சாவடிகளில் மொத்தம் 900 மரக்கன்றுகள் நடப்பட்டன. லோக்சபா தேர்தல் மொத்தமுள்ள 10,23,699 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள்-3,76,431, பெண் வாக்காளர்கள்-4,27,742, மூன்றாம் பாலினத்தவர் 104 பேர் ஓட்டளித்தனர். லோக்சபா தேர்தலில் மாநிலத்தின் ஓட்டு பதிவு 78.57 சதவீதமாகும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

