தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரசார வாகனங்களை குறைத்து கொள்ள தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

பிரசார வாகனங்களை குறைத்து கொள்ள தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

பிரசார வாகனங்களை குறைத்து கொள்ள தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்


ADDED : ஏப் 03, 2024 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 03:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அவர், பேசியதாவது:

இந்தத் தேர்தலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் நடத்துவதற்கு ஏதுவாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரசார வாகனங்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைத்துக் கொள்ள முன்வரலாம். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஓட்டுச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் வாகனங்களில் வருவதைத் தவிர்த்து நடந்து சென்று ஓட்டளிக்கலாம்.

வரும் 17ம் தேதி மாலை 6:00 மணி முதல் ஓட்டுப்பதிவு நாளான 19ம் தேதி மாலை 6:00 மணி வரை தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்பை ஓட்டுபதிவு நாளான 19ம் தேதி காலை 7:00 மணி முதல் ஜூன் 1ம் தேதி மாலை 6:30 மணி வரை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 17ம் தேதி முதல் ஓட்டுப்பதிவு நாளான 19ம் தேதி வரையிலான 3 நாட்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி அனைத்து விதமான மதுபானக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையொட்டி மாகி பகுதியில் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், ஆந்திர மாநில லோக்சபா தேர்தலையொட்டி, ஏனாம் பகுதியில் மே மாதம் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், துணைத் தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், ஆதர்ஷ், மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி வினயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us