/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை பொறியாளர் ஆய்வு
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை பொறியாளர் ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை பொறியாளர் ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : ஜூன் 13, 2024 12:12 AM

புதுச்சேரி : கனகன் ஏரி பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று 2வது நாளாக ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் புது நகரில் பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு, கழிவறைகள் வழியாக வெளியேறியதால் 16 வயது சிறுமி, மூதாட்டி உட்பட 3 பெண்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில், கனகன் ஏரியில் உள்ள பொதுப்பணித்துறையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படவில்லை, அங்கிருந்து உருவாகும் விஷ வாயு வீடுகள் வழியாக வெளியேறி விபத்து ஏற்படுத்தியது என குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி மற்றும் இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை கனகன் ஏரி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் 2வது நாளாக ஆய்வு நடத்தினர். சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு, கனகன் ஏரி சூழல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் தெரிவித்த புகார் அடிப்படையில் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தோம். சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படுகிறது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது. விபத்து நடந்த வீடுகளில் எஸ் டிராப் (பென்ட்) வைக்காதது தான் விஷவாயு கழிவறைக்குள் வந்ததற்கான காரணமாக இருக்கும். விசாரணைக்கு பிறகே முழு விபரம் தெரிய வரும். துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.