/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - கடலுார் சாலையில் புதிய மேம்பாலம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
/
புதுச்சேரி - கடலுார் சாலையில் புதிய மேம்பாலம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி - கடலுார் சாலையில் புதிய மேம்பாலம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி - கடலுார் சாலையில் புதிய மேம்பாலம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
ADDED : ஆக 31, 2024 02:27 AM

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலை ரெட்டிச்சாவடி மலட் டாற்றில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதல்வர் ரங்கசாமி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கி றது. ஆனால், சாலை தரம் உயர்த்தப்படாமலும், பாதுகாப்பு அம்சங்கள் சரியாக செய்யப்படாமல் உள்ளதால் விபத்துக்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி மலட்டாறு மேம்பாலம் குறுகலாக இருப்பதால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால், இந்த பாலத்தை அகலப்படுத்தி தரம் உயர்த்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்டம் சார்பில், ரெட்டிச்சாவடி மலட்டாற்றில் 5 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணியை, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தற்போது, பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்பணித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ,, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலை பிரிவு செயற் பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.