/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளடங்கிய புதிய காப்பீட்டு திட்டம் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளடங்கிய புதிய காப்பீட்டு திட்டம் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளடங்கிய புதிய காப்பீட்டு திட்டம் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளடங்கிய புதிய காப்பீட்டு திட்டம் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : ஆக 13, 2024 05:14 AM
புதுச்சேரி: மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளடங்கிய புதிய காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் சிவா: ஆயுஷ்மான் திட்டத்தை அரசு விரிவுப்படுத்தப்படுமா, அதன் நிலை என்ன. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படுமா
முதல்வர் ரங்கசாமி: மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இத்திட்டத்தை கொண்டு வருவதற்காக துறை இயக்குனரிடம் சொல்லியுள்ளேன்.
எதிர்கட்சி தலைவர் சிவா: ஆயுஷ்மான் திட்டத்திற்கு கடந்த 2022-23, 2023-24 ஆண்டுகளில் புதுச்சேரி அரசு ஒதுக்கிய பங்கு தொகை எவ்வளவு.
முதல்வர் ரங்கசாமி: மொத்தம் 8 கோடி செலவிடப்பட்டத்தில் அரசு 3 கோடியை அரசு கொடுத்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: இதுவரை 16 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். இதில் மத்திய அரசின் பங்களிப்பு என்ன. இந்த காப்பீடு திட்டம் சரியில்லை என்பதால தான் வேறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள். இந்த காப்பீடு திட்டத்தில் நம்முடைய அரசு பொது மருத்துவமனையில் இன்சூரன்ஸ் அப்பீல் செய்யப்பட்டுள்ளதா.
முதல்வர் ரங்கசாமி: ஆயுஷ்மான் திட்டம் குறித்து கடந்த சட்டசபையிலும் எம்.எல்.ஏக்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அதன் அடிப்படையில் காப்பீடு திட்டத்தினை இணைத்து செயல்படுத்தநடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆயுஸ்மான் திட்டத்தில் மக்கள் ஒரளவிற்கு பயனடைந்து வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: ஓரளவு பயன்பட்டு இருந்தால் நாங்கள் ஏன் இங்குபேச போகிறோம்.இந்த திட்டத்திற்காக செலவு செய்துள்ள 16 கோடி விரயமாகியுள்ளது. இந்த பணத்தை கொடுத்திருந்தால் கூட புதுச்சேரி மக்கள் பிழைத்து இருப்பார்கள்.
முதல்வர் ரங்கசாமி: அதனால் தான் எல்லோருக்கும் கிடைக்கிற மாதிரி ஒரு காப்பீடு திட்டத்தை பட்ஜெட்டில் சொல்லி இருக்கின்றோம்.
பி.ஆர்.சிவா: ஆயுஷ்மான் திட்டத்தை நம்பி ஏற்கனவே பலரும் செய்துள்ளனர். அவர்கள் பணம் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அரசு என்ன சொல்ல போகிறது.
இறுதியாக எழுந்த முதல்வர் ரங்கசாமி: மோசடி திட்டம் என்று சொல்ல தேவையில்லை. மக்கள் பயனடைந்துள்ளனர்.மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளடங்கிய புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.இந்த திட்டத்தால் 5 லட்சம் ரூபாய் வரைசிகிச்சைக்கு நிதி வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் அனல் பறந்தது.

