காசா அமைதி ஒப்பந்தத்தில் முக்கிய பங்காற்றிய எகிப்து அதிபர்: பிரதமர் மோடி பாராட்டு
காசா அமைதி ஒப்பந்தத்தில் முக்கிய பங்காற்றிய எகிப்து அதிபர்: பிரதமர் மோடி பாராட்டு
ADDED : அக் 17, 2025 07:00 PM

புதுடில்லி: காசா அமைதி ஒப்பந்தத்தில் எகிப்து அதிபர் சிசி முக்கிய பங்காற்றினார் என்று பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
இந்தியா வந்துள்ள எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்தர் அப்தெலாட்டி, பிரதமர் மோடியை புதுடில்லியில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், தொழில் நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்தர் அப்தெலேட்டியை வரவேற்றதில் மகிழ்ச்சி. காசா அமைதி ஒப்பந்தத்தில் என் நண்பர் அதிபர் சிசி முக்கிய பங்கு வகித்ததற்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் மக்கள், நம் பிராந்தியம் மற்றும் மனிதகுலத்திற்கு இந்தியா-எகிப்து உறவானது முன்பை விட மென்மேலும் வலுப்பெற்று வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தமது பதிவில் கூறி உள்ளார்.