/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'எதிர்க்கட்சி எம்.பி.,க்கா ஓட்டளிக்க வேண்டும்' முதல்வர் ரங்கசாமி கேள்வி
/
'எதிர்க்கட்சி எம்.பி.,க்கா ஓட்டளிக்க வேண்டும்' முதல்வர் ரங்கசாமி கேள்வி
'எதிர்க்கட்சி எம்.பி.,க்கா ஓட்டளிக்க வேண்டும்' முதல்வர் ரங்கசாமி கேள்வி
'எதிர்க்கட்சி எம்.பி.,க்கா ஓட்டளிக்க வேண்டும்' முதல்வர் ரங்கசாமி கேள்வி
ADDED : ஏப் 14, 2024 05:28 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்க சாமி, நெட்டப்பாக்கம் தொகுதியில் பிரசாரம் செய்தார்.
வடுக்குப்பம் கிராமத்தில் அவர், பேசியதாவது:
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என, கருத்துக் கணிப்புகள் வந்துள்ளது.
அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்போது, புதுச்சேரியில் இருந்து யார் வெற்றிப்பெற்று சென்றால் மாநில வளர்ச்சிக்கு சிறப்பாக இருக்கும். மாநில மக்களின் நலனுக்கு யார் சென்றால் நன்மை கிடைக்கும் என்பதை கருத்தில்கொண்டு ஓட்டளிக்க வேண்டும்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் ஒரு மாநிலம். இந்த மாநிலத்துக்கு அதிக நன்மை கிடைக்க வேண்டும் என்றால், அங்கு ஆளுகின்ற ஆட்சியினுடைய, எம்.பி., இங்கிருந்து சென்றால் நம்முடைய மாநில வளர்ச்சிக்கு உரிய கூடுதல் நிதியை நம்மால் பெற முடியும்.
பலத்திட்டங்கள், தொழிற்சாலைகளை இங்கே கொண்டுவர முடியும். அதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கவும், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை கொணடு வர முடியும்.
கடந்த முறை இங்கிருந்து சென்ற எம்.பி., வைத்திலிங்கம், நம்முடைய மாநிலத்துக்காக லோக்சபாவில், கோரிக்கை வைத்து பேசியது என்ன. மாநிலத்துக்கு ஏதாவது திட்டத்தை கொண்டுவர முடிந்ததா. மீண்டும் அவர், சென்றால் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர முடியும். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் எம்.பி.,க்கா நாம் ஓட்டளிக்க வேண்டும்.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருக்கும்போது, நம்முடைய எம்.பி., வெற்றி பெற்று சென்றால் அவர் அமைச்சராகிற வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி நம்முடைய கோரிக்கைகளை பிரதமரிடம் கூறி, நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வர முடியும். புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நமச்சிவாயத்துக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
பிரசாரத்தின்போது துணை சபாநாயகர் ராஜவேலு, மாலதி ராஜவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

