தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.ஆர்.காங்., வேட்பாளரை அதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரம்

என்.ஆர்.காங்., வேட்பாளரை அதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரம்

என்.ஆர்.காங்., வேட்பாளரை அதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 09:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 09:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கூடுதல் திட்டங்கள் கொண்டு வர, ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்யுங்கள் என, முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில், அசோக் ஆனந்தன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி, புதுப்பேட்டை புத்துளாய் மாரியம்மன் கோவில் பகுதி, வினோபா நகர் பகுதியில் முதல்வர் ரங்கசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்தின் வெற்றியின் மூலம் அரசின் ஆட்சி மேலும் வலுப்பெறும். தற்போது அரசு செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கூடுதலாக கொண்டு வரப்படும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எங்கள் அரசு விரைவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

நல்லாட்சி நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மேலும் ஒரு நல்ல வேட்பாளர் இணையும் போது ஆட்சி மேலும் சிறப்பாக செயல்பட முடியும். எனவே தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் அசோக் ஆனந்துக்கு ஆதரவு அளித்து, ஜக்கு சின்னத்திற்கு ஓட்டளித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us