UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:45 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர், பொது மக்களுக்கு இடையூறாக ரகளை செய்து வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், போதையில் பொது மக்களிடம் ரகளை செய்த மரக்காணம், கீழ் அருங்குணம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் விநாயகம், 42; என்பவரை கைது செய்தனர்.
