தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:45 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2 நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 6ம் தேதி நடக்கிறது. இதற்காக 31 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலும் ஓட்டுச் சாவடிகள் பள்ளிகளில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஓட்டுப் பதிவுக்கு முதல் நாள் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், ஓட்டுச் சாவடிக்கு எடுத்துச் செல்லப்படும். இதன் காரணமாக தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு 5, 6ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி துறை இயக்குநர் மோகன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இடைத்தேர்தலையொட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 5, 6ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் ஓட்டுப் பதிவுக்காக இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த நாள்களில் வகுப்புகள், நிகழ்ச்சிகள் மற்றும் இதர நடவடிக்கைகள் எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
