/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : ஜூன் 27, 2024 02:39 AM
புதுச்சேரி: லோக்சபா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவிற்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில், லோக்சபா சபாநாயகராக, நீங்கள் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.உங்களின் உன்னத பார்லிமென்ட் அனுபவத்தின் வழியாக,சபையை வழி நடத்திய கண்ணியத்தை, இந்த தேசம் ஏற்கனவே கண்டுள்ளது.
உங்களது திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகம்,லோக்சபாவில் பல சாதனைகளை படைத்து,பார்லிமென்ட்ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். இரண்டாவது முறையாக, இந்த பதவியைப் பெற்றதற்கு புதுச்சேரி மக்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.