/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாமில் பேரணியாக சென்று முதல்வர் ரங்கசாமி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 12, 2024 12:12 AM

புதுச்சேரி : பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து ஏனாமில் 15 கி.மீ., தொலைவிற்கு முதல்வர் ரங்கசாமி பேரணியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி கடந்த 27ம் தேதி முதல் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று புதுச்சேரியில் இருந்து 850 கி.மீ. துாரத்தில் உள்ள ஏனாம் பிராந்தியத்தில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரித்தார்.
திறந்த வேனில், முதல்வர் ரங்கசாமி,பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம்,அமைச்சர் லட்சுமி நாராயணன்,புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர். அனைவருக்கும் ஏனாம் பா.ஜ.,சார்பில் ராட்சத மாலை கிரேன் மூலம் கொண்டு வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தின்போது மத்திய,மாநில அரசுகளின் சாதனைகளை பட்டியலிட்ட புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்ய வேண்டும்.
ஏனாமில் அதிக ஓட்டுகளை பெற்று தர வேண்டும் என தெலுங்கு மொழியில் பேசி, ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து பேரணி சாவித்திரி நகர்,கிரியம் பேட்டா,திரியாலா திப்பா, தொம்டிபேட்டா பரம்பேட்டா, ஓய்.எஸ்.ஆர்.காலனி, கொர்சம்பேட்டா.ராஜிவ் நகர், பாலயோகி நகர்,பீம் நகர், கனகால்பேட்டா,வம்சிகிருஷ்ண நகர்,அம்பேத்கர் நகர், ஏனாம் டவுன் என ஏனாம் முழுவதும் 15 கி.மீ.துாரம் வாகன பேரணியாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். வழி நெடுக்கிலும் பூக்களை துாவி அப்பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.