ADDED : ஆக 04, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதி, கரியமாணிக்கம் கிராமத்தில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா அமைச்சர் ராஜவேலு தலைமையில் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழாவையொட்டி, நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் முதல்வர் ரங்கசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. அன்னதானம், மரக்கன்றுகள், மகளிர்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்களக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் நெட்டப்பாக்கம் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
