/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நமச்சிவாயம் வென்றால் கூடுதல் நிதி பெற முடியும்' முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்
/
'நமச்சிவாயம் வென்றால் கூடுதல் நிதி பெற முடியும்' முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்
'நமச்சிவாயம் வென்றால் கூடுதல் நிதி பெற முடியும்' முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்
'நமச்சிவாயம் வென்றால் கூடுதல் நிதி பெற முடியும்' முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்
ADDED : ஏப் 07, 2024 05:26 AM

புதுச்சேரி : 'புதுச்சேரியில் இருந்து பா.ஜ., எம்.பி., சென்றால் தான் கூடுதல் நிதி பெற முடியும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து உருளையன்பேட்டை தொகுதியில் முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்தார். எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், பா.ஜ., செயலாளர் சாம்ராஜ், என்.ஆர். காங்., மாவட்ட தலைவர் முருகன் உடனிருந்தனர்.
பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
ஏழைகளுக்கு நல்ல உணவு, வீடு, உடுத்த உடை என அடிப்படை வசதிகள் ரொம்ப முக்கியம். அதனை செய்து கொடுப்பது தான் என்னுடைய எண்ணமாக எப்போதும் இருக்கும்.வீடுஇல்லாத ஏழைகளுக்கு கொடுக்க ஆயிரக்கணக்கானவீடுகளை பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறோம். சாலையில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படும்.
சாலைகளை சீரமைத்து வருகிறோம். நகரத்தில் சிமெண்ட் ரோடுகளாக போட்டு வருகிறோம். குடிநீரில் உப்பு நீர் கலந்ததால் ரூ.450 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். கடந்த காங்., ஆட்சியில் இதெல்லாம் நடந்ததா?
மத்தியில் உள்ள அரசோடு சுமூக உறவு ஆட்சி புதுச்சேரியில் நடக்க வேண்டும். நாம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் கவர்னர் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு உதவி கிடைக்க வேண்டும். அதற்கு புதுச்சேரியில் இருந்து பா.ஜ., எம்.பி., சென்றால் தான் கூடுதல் நிதி பெற முடியும்.
கடந்த 5 ஆண்டுகளாக வைத்திலிங்கம் எம்.பி.,யாக இருந்தார். அவரால் பார்லிமெண்ட்டில் பேசி எதையாவது பெற்று தர முடிந்ததா? மத்திய அரசின் அனுமதி பெற்று ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்குவோம். இன்னும் 2 ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வராக அமைச்சராக இருப்பேன். உங்களுக்கு குறைகள் இருந்தால் நேரில் வந்து சந்தித்து சொல்லுங்கள்.
நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

