/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகழேந்தி எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
/
புகழேந்தி எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
புகழேந்தி எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
புகழேந்தி எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
ADDED : ஏப் 07, 2024 05:24 AM

விழுப்புரம், : விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்ட புகழேந்தி எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தி உடல் நலக்குறைவால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டது.
நேற்று இரவு, சிதம்பரம் லால்பேட்டையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 9:20 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் சென்று புகழேந்தி எம்.எல்.ஏ.,வின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
வி.சி., தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், மகேஷ், கணேசன், வி.சி., எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் எம்.பி., ஆகியோரும் புகழேந்தி உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து 9:30 மணிக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், விக்கிரவாண்டி டோல்கேட் அருகே உள்ள பட்டுக்கோட்டை மெஸ்சில் சாப்பிட்டார். பின், புதுச்சேரி நோக்கி காரில் புறப்பட்டார்.
அமைச்சர் பொன்முடி கூறுகையில், ''மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ., கட்சிக்காகவும், மக்களுக்காகவும் சிறப்பாக பணியாற்றினார். எனது சகோதரனாக இருந்து கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உழைத்திட்ட புகழேந்தியின் இறப்பு, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது''என்றார்.

