ADDED : ஜூலை 31, 2026 05:31 PM
புதுச்சேரி: ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மங்கலம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி முதல் தவணையை வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ், மங்கலம் தொகுதியை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி, முதல் தவணையா தலா 2 லட்சத்து, 75 ஆயிரம் வீதம், 68 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், முன்னாள் வாரியத் தலைவர்கள் ரேவதி பற்குன், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், சங்கர், செல்வம், சரவணன், கண்ணபிரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
