sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதல்வரின் தனிசெயலர்- - அரசு கொறடா மீண்டும் மோதல் சட்டசபையில் திடீர் பரபரப்பு

/

முதல்வரின் தனிசெயலர்- - அரசு கொறடா மீண்டும் மோதல் சட்டசபையில் திடீர் பரபரப்பு

முதல்வரின் தனிசெயலர்- - அரசு கொறடா மீண்டும் மோதல் சட்டசபையில் திடீர் பரபரப்பு

முதல்வரின் தனிசெயலர்- - அரசு கொறடா மீண்டும் மோதல் சட்டசபையில் திடீர் பரபரப்பு


ADDED : ஆக 29, 2024 07:28 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தன்னை அழைக்காமல் முதல்வர் நிவாரண நிதிக்கான காசோலை அளித்ததால், முதல்வர் தனிச்செயலரிடம் அரசு கொறடா ஆறுமுகம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். தனிச்செயலர் முதல்வரா அல்லது அதற்கும் மேலேயா எனக்கேட்டு கோபத்துடன் அரசு கொறடா வெளியேறிதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திராநகர் சட்டசபை தொகுதியில் முதல்வர் நிவாரண நிதி பெற பலரும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான காசோலைகளை தனிச்செயலர் அமுதன் தந்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த அத்தொகுதி எம்.எல்.ஏ.,வும் அரசு கொறடாவுமான ஆறுமுகம் சட்டசபை வளாகத்தில் நேற்று வந்தார். அவர் தனது தொகுதி மக்களுக்கான முதல்வர் நிவாரண நிதியை தந்தது ஏன் என்று சராமரியாக கேள்வி எழுப்பினார்.

தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து கோடிக்கணக்கில் பணம் செலவழித்து எம்.எல்.ஏ.,வாகியுள்ளேன். இங்கே அமர்ந்து கொண்டு என்னிடமே வேலை காட்டுவது ஏன். முதல்வர் தனிச்செயலர் பதவியை ராஜினா செய்து விட்டு எம்.எல்.ஏ.,வாகவேண்டியது தானே.. எம்.எல்.ஏ.,விடம் தராமல் நீங்கள் எப்படி தரலாம் என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து முதல்வரின் தனிசெயலர் அமுதன் அவரது உள்அறைக்குள் அமர்ந்துவிட்டார்.

பின்னர் வெளியே வந்த அங்கிருந்தவர்களிடம் அரசு கொறடா ஆறுமுகம், எங்க ஆட்களை வெளியே போ என்று சொல்றதுக்கு நீ யார்.

அவங்க அவங்க கோடி கோடியாய் செலவு செய்திட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கோம் ஏ.சி ரூமில் உட்கார்ந்து கிட்டு வேலை காட்டுறியா.

நீ என்ன சி.எம்மா , அதுக்கு மேலயா ஒழுங்கா இருக்கணும் இல்லன்னா ஒழிச்சி கட்டிவிடுவேன் என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதால் புதுச்சேரி சட்டசபை பெரும் கூச்சல் குழப்பமே நிலவியது.

இனி தொகுதியில் நேரடியாக என்னை அழைக்காமல் காசோலை தந்தால் நடப்பதே வேறு என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கோபமாக வெளியேறினார்.

முதல்வரி நிவாரண நிதி விவகாரத்தில் தொடர்ந்து முதல்வரின் தனி செயலர் அமுதன்-அரசு கொறடா ஆறுமுகம் மோதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி இதேபோல் நிவாரண நிதி தொடர்பாக முதல்வரின் தனிசெயலர்- அரசு கொறடா இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது முதல்வரின் தனி செயலரை கடுமையாக அரசு கொறடா ஆறுமுகம் எச்சரித்து இருந்தது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us