/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்வது அவசியம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் முதல்வர் பேச்சு
/
நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்வது அவசியம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் முதல்வர் பேச்சு
நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்வது அவசியம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் முதல்வர் பேச்சு
நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்வது அவசியம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் முதல்வர் பேச்சு
ADDED : ஏப் 08, 2024 05:37 AM

திருக்கனுார்: புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதியில் முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்தார்.
காட்டேரிக்குப்பத்தில் துவங்கிய பிரசாரத்தில் அவர், பேசியதாவது:
மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும். மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்.அதனால், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்வது அவசியம்.
இந்த தொகுதியில் பிரசாரம் செய்த காங்., வேட்பாளர் இலவச மின்சாரம் குறித்தும், அது விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 2016ல் தான் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் துவங்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் பாக்கி வைத்த ரூ. 28 கோடி தொகையை நம்முடைய அரசு தான் செலுத்தியது. அதேபோல், கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடியது யார்? என்று உங்களுக்கு தெரியும். தனி அதிகாரி நியமித்து சர்க்கரை ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மகளிர்களுக்கான ரூ.1,000 உதவித்தொகை 64 ஆயிரம் பெண்களுக்கு கொடுத்துள்ளோம்.
பட்டியலின மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் முறையாக செயல்படுத்தி வருகிறோம். சட்டசபை தேர்தலின் போது அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது. அதற்குள் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்துவோம். லோக்சபா தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்றவர் என்ன செய்தார். ஏதும் செய்யவில்லை.அவர் மீண்டும் அங்கு போகவேண்டுமா. எனவே, தேர்தல் பணியை சிறப்பாக செய்து, தாமரை சின்னத்தில் அதிக ஓட்டுகள் பெற்று தர வேண்டும் என்றார்.
பிரசாரத்தில், அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ.,அருள்முருகன், பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் முத்தழகன், மண்டல பொறுப்பாளர் கண்ணன், பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

