/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரூப் - சி பணியிடத்திற்கு 2 ஆண்டு வயது சலுகை மத்திய அரசு அனுமதி பெற தலைமை செயலர் டில்லியில் முகாம்
/
குரூப் - சி பணியிடத்திற்கு 2 ஆண்டு வயது சலுகை மத்திய அரசு அனுமதி பெற தலைமை செயலர் டில்லியில் முகாம்
குரூப் - சி பணியிடத்திற்கு 2 ஆண்டு வயது சலுகை மத்திய அரசு அனுமதி பெற தலைமை செயலர் டில்லியில் முகாம்
குரூப் - சி பணியிடத்திற்கு 2 ஆண்டு வயது சலுகை மத்திய அரசு அனுமதி பெற தலைமை செயலர் டில்லியில் முகாம்
ADDED : ஜூலை 29, 2024 06:23 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் குரூப் - சி பணியிடத்திற்கு வயது உச்ச வரம்பில், 2 ஆண்டு சலுகை பெற, தலைமை செயலர் மற்றும் தேர்வு நடத்தும் செயலர் கடந்த ஒரு வாரமாகடில்லியில் முகாமிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணிகள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. இதில் குரூப் - சி பணியிடங்களான எல்.டி.சி., யு.டி.சி., பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்திபணி ஆணைவழங்கப்பட்டது.
கொரோனா காலத்தை சுட்டி காட்டி, அதிகபட்ச வயது உச்ச வரம்பில், 2 ஆண்டு சலுகை அளிக்கப்பட்டது.
இதை பின்பற்றி குரூப் பி பணியிடங்களுக்கும்,2 ஆண்டு சலுகை வழங்க புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனை கண்ட மத்திய அரசின் நிர்வாக மற்றும் பயிற்சி துறை, வயது உச்ச வரம்பில் சலுகை அளிக்க முடியாது என்று தெரிவித்ததுடன், குரூப் - சி பணி நிரப்பும்போது, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வயது உச்சவரம்பில் 2 ஆண்டு சலுகை கொடுக்கவில்லை. புதுச்சேரியில் மட்டும் எவ்வாறு சலுகை வழங்கப்பட்டது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தது.
இதனால் குரூப்- பி பணிக்கு வயது உச்சவரம்பில் 2 ஆண்டு சலுகை இல்லை என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அறிவித்தது. இந்நிலையில்,குரூப் சி பணியானதீயணைப்பு வீரர், தீயணைப்பு நிலைய அதிகாரி, கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளர், திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை பணி உள்ளிட்டவைக்குவயது உச்ச வரம்பில் 2 ஆண்டு சலுகை அளித்து அறிவிப்பு வெளியிட்டு, கடந்த ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டது.
தீயணைப்பு வீரர் மற்றும்நிலைய அதிகாரி பணிக்கு, கடந்த பிப்., மாதம் உடற்தகுதி தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், குரூப் சி பணியிடத்திற்கு 2 ஆண்டு வயது சலுகை அளிப்பதற்கு சிக்கல் எழுந்துள்ளதால், தீயணைப்பு வீரர், தீயணைப்பு நிலைய அதிகாரி, கூட்டுறவுத் துறை இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண கடந்த ஒரு வார காலமாக தலைமை செயலர் சரத் சவுக்கான், போட்டி தேர்வுகள் நடத்தும் செயலர் பங்கஜ்குமார் ஷா ஆகியோர் டில்லியில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரும் பணிகளை முடித்து கொண்டு இன்று அல்லது நாளை புதுச்சேரி திரும்ப வாய்ப்பு உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.