/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் நர்சிங் கல்லுாரியில் குழந்தை பராமரிப்பு பயிற்சி
/
தாகூர் நர்சிங் கல்லுாரியில் குழந்தை பராமரிப்பு பயிற்சி
தாகூர் நர்சிங் கல்லுாரியில் குழந்தை பராமரிப்பு பயிற்சி
தாகூர் நர்சிங் கல்லுாரியில் குழந்தை பராமரிப்பு பயிற்சி
ADDED : மார் 04, 2025 02:59 AM

புதுச்சேரி : தேவியாக்குறிச்சி தாகூர் நர்சிங் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு பயிற்சி நடந்தது.
தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேல், செயலாளர் பரமசிவம், பொருளாளர் காளியண்ணன், துணைத் தலைவர் காளியப்பன் ராஜூ, இணை செயலாளர்கள் சிலம்பரசன், அருண்குமார், இயக்குனர்கள் மற்றும் தாகூர் நர்சிங் கல்லுாரி முதல்வர் தங்கமணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுகுணா, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
பேராசிரியர்கள் தமிழ்ச்செல்வி, யுவராணி, கவுசல்யா ஆகியோர் குழந்தை மற்றும் குழந்தை பருவ நோய்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து விளக்கினர். பயிற்சி முகாமில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.