ADDED : மார் 05, 2025 04:49 AM

திருபுவனை: சி.ஐ.டி.யூ., சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யூ., சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, புதுச்சேரியில் நான்கு இடங்களில் 4 நாட்கள் நடக்கும் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் கடந்த 3ம் தேதி துவங்கியது.
மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் நடந்த பிரசாரத்திற்கு, தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ராஜா தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் மணிபாலன் பிரசாரத்தை துவங்கி வைத்தார்.
மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, புதுச்சேரி சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் ராமசாமி, மதிவாணன், தினேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் சீனுவாசன் நிறைவு உரையாற்றினார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந் தது. வினாயகம் நன்றி கூறினார்.