/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆக்கிரமிப்பை கண்டித்து சி.ஐ.டி.யூ., போராட்டம்
/
ஆக்கிரமிப்பை கண்டித்து சி.ஐ.டி.யூ., போராட்டம்
ADDED : மே 17, 2024 11:16 PM

திருபுவனை: திருபுவனை மேம்பாலம் அருகில் சி.ஐ.டி.யூ., வாகன நிறுத்துமிடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், திருபுவனை சென்ட்ரல் தியேட்டர் எதிரே, சாலையோரம் இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யு., நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சங்கம் கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்த வாகனம் நிறுத்துமிடத்தை தனிநபர் ஆக்கிரமித்து அங்கு, ஜல்லி கொட்டி வைத்து, வாகனத்தை நிறுத்தக்கூடாது என மிரட்டல் விடுக்கிறார். இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நடவடிக்கை இல்லாததால், நேற்று பகல் 12:00 மணிக்கு திருபுவனை மேம்பாலம் நான்கு முனை சந்திப்பில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில், பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைவர் பிரபுராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், தொடர்ந்து சாலை மறியல் நடந்தது.
சங்க பொறுப்பாளர் மதிவாணன், மா.கம்யூ., கொம்யூன் செயலாளர் அன்புமணி, சங்கர், கொளஞ்சியப்பன், வினாயகம் உள்பட பலர் கலந்கொண்டனர். தகவல் அறிந்து வந்த நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று அதனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

