/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.எல்., ஊழியர்களாக பணி அமர்த்த முடியாது: வடிசாராய ஆலை நிர்வாகம் கைவிரிப்பு
/
சி.எல்., ஊழியர்களாக பணி அமர்த்த முடியாது: வடிசாராய ஆலை நிர்வாகம் கைவிரிப்பு
சி.எல்., ஊழியர்களாக பணி அமர்த்த முடியாது: வடிசாராய ஆலை நிர்வாகம் கைவிரிப்பு
சி.எல்., ஊழியர்களாக பணி அமர்த்த முடியாது: வடிசாராய ஆலை நிர்வாகம் கைவிரிப்பு
ADDED : மார் 22, 2024 05:45 AM
புதுச்சேரி : சட்ட விரோத பணி நியமனம் குறித்து ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்த சூழ்நிலையில் 53 பேரையும் சி.எல்., ஊழியர்களாக பணி அமர்த்த முடியாது என வடிசாராய ஆலை தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளது.
புதுச்சேரி வடிசாராய ஆலையில் கடந்த 2015ம் ஆண்டு 53 பல்நோக்கு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இந்த நியமனத்தை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் நீதிமன்றம், ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி நியமன விதிமுறைகளை பொது துறை நிறுவனம் காலத்துகேற்ப மாற்றாதது தெரிகிறது.
தினக்கூலி ஊழியர்களை நியமிக்கும்போதும், பணி நிரந்தரம் செய்யும்போதும் வயது, கல்வி தகுதி விஷயங்களில் நியமன விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, கடந்த 07.12.2015ம் ஆண்டு வடிசாராய ஆலையில் நியமனம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு நியமனம் சட்டவிரோதமானது என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து பணி நியமனம் செய்யப்பட்ட 53 ஊழியர்களும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் இந்த ஊழியர்களை கருணை அடிப்படையில் ஊழியர்களாக அமர்த்துவது தொடர்பாக மனு அளித்தால் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என, தெரிவித்து இருந்தது.
அதனையடுத்து 53 பேரும் சி.எல்.,ஊழியர்களாக (தினக்கூலி) தங்களை கருதி வேலை கொடுக்க வேண்டும் என தனித்தனியே அன்மையில் மனு கொடுத்து இருந்தனர்.
இது தொடர்பாக, மனுவினை பரிசீலனை செய்த வடிசாராய ஆலை நிர்வாகம், ஐகோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி 53 ஊழியர்களையும் சி.எல்., ஊழியர்களாக பணி அமர்த்த முடியாது என, நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளது.

