ADDED : மே 26, 2024 05:11 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், நகரை துாய்மையாக வைத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.
புதுச்சேரியில் குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றும் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும், எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் இணைந்து தவளக்குப்பம், தானாம்பாளையம் பகுதியில் ஆணையர் ரமேஷ் தலைமையில் கொம்யூன் ஊழியர்கள் நேற்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, மக்கும், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பெற்று வருகிறோம். பொது இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம். குப்பை தொட்டியில் குப்பைகளை போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் நாகராஜன், உதவிப் பொறியாளர் சரஸ்வதி, இளநிலை பொறியாளர் அகிலன், சுரேஷ் இளநிலை உதவியாளர் செழியன் உட்பட கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், எச்.ஆர். ஸ்கொயர் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.