ADDED : ஜூலை 25, 2026 11:03 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளுனி மேல்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.
குளுனி இல்லத் தலைவி செலின் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் மெர்சி வரவேற்றார். குளுனி தென்கிழக்கு மாகாண தலைவி லொரைன் பிண்டோ, பள்ளி முதல்வர் ரோசிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., ராகவ், போக்குவரத்து எஸ்.பி., திவ்யா, கவுரவ விருந்தினராக மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் ஆகியோர் கடந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், பள்ளி நிர்வாகிகள், முன்னாள் முதல்வர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பள்ளி மாணவ உப தலைவி பெலிசிட்டா நன்றி கூறினார்.
