தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்ஸ்டிடியூஷன் ஆப் கிரீன் இன்ஜினியர்ஸ் அமைப்பு துவக்கம் 

இன்ஸ்டிடியூஷன் ஆப் கிரீன் இன்ஜினியர்ஸ் அமைப்பு துவக்கம் 

இன்ஸ்டிடியூஷன் ஆப் கிரீன் இன்ஜினியர்ஸ் அமைப்பு துவக்கம் 


ADDED : ஜூலை 25, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் நிலையான நீடித்த வளர்ச்சி இலக்குகளை வலியுறுத்தும் இன்ஸ்டிடியூஷன் ஆப் கிரீன் இன்ஜினியர்ஸ் அமைப்பின் துவக்க விழா நடந்தது.

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி டீன் அறிவழகர் வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் பொருளாளர் ராஜராஜன், துணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் நோக்கவுரையாற்றினர். தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

தி இன்ஸ்டிடியூஷன் ஆப் கிரீன் இன்ஜினியர்ஸ் அமைப்பின் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் பாலமுருகன் , இயக்குனர் சுரேஷ் சீதாராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தலைமை விருந்தினர் பிரித்வி குரோ கேர் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி குமார் மாணவர்களுடன் உரையாடினார்.

தொடர்ந்து மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பசுமை சூழ்நிலை மாற்றத்திற்கு சிறப்புடன் பங்காற்றிய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் அகாடெமிக் டீன் அன்புமலர், வேலை வாய்ப்பு துறை டீன் கைலாசம் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எந்திரவியல் துறை பேராசிரியர்கள் ரவிசங்கர், பவளவன பாண்டியன் மற்றும் ஹைஜன் அமைப்பின் மாணவர்கள் செய்திருந்தனர். 

எந்திரவியல் துறை தலைவர் ஹேமலதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us