/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் தவறி விழுந்த வாலிபரை கடலோர காவல் படையினர் மீட்பு
/
கடலில் தவறி விழுந்த வாலிபரை கடலோர காவல் படையினர் மீட்பு
கடலில் தவறி விழுந்த வாலிபரை கடலோர காவல் படையினர் மீட்பு
கடலில் தவறி விழுந்த வாலிபரை கடலோர காவல் படையினர் மீட்பு
ADDED : ஏப் 14, 2024 05:29 AM

புதுச்சேரி: பாண்டி மெரினா கடலில் தவறி விழுந்து தத்தளித்த வாலிபரை இந்திய கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர்.
இந்திய கடலோர காவல்படையினர் நேற்று காலை கப்பலில் ரோந்து சென்றனர். காலை 8:30 மணியளவில், பாண்டி மெரினாவில் வாலிபர் ஒருவர் கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்தனர்.
உடனே அவரை நோக்கி விரைந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர், அந்த வாலிபரை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
பின் அவருக்கு படகில் உள்ள மருத்துவ உபகரணங்களைக் கொண்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் கடலுார் மாவட்டம், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் பாலமுருகன் என்பதும், பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரோலக்ஸ் என்ற மீன்பிடி படகில் மீன்பிடிக்க செல்லும் போது தவறி விழுந்தது தெரிய வந்தது.
அவரை கடலோர காவல் படையினர், கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு மீனவரை காப்பாற்றிய கடலோர காவல்படை வீரர்களை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா பாராட்டினார்.

