/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலோர காடு வளர்ப்பு மரக்கன்று நடும் விழா
/
கடலோர காடு வளர்ப்பு மரக்கன்று நடும் விழா
ADDED : பிப் 24, 2025 03:57 AM

புதுச்சேரி: மணப்பட்டில் அரசு நடுநிலை பள்ளி, வனத்துறை சார்பில், கடற்கரையோர பகுதியில் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடந்தது.
ஆசிரியர் விவேகானந்தன் வரவேற்றார்.பள்ளியின் பசுமைப்படை பொறுப்பாளர் ஆசிரியர் முருகன், காடுவளர்ப்பின் அவசியம் குறித்து பேசினார். தலைமையாசிரியர் அமர்தேவ் தலைமை தாங்கி, கடற்கரையோர பகுதியில் மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தார்.
மணப்பட்டுவன பொறுப்பாளர்கள் பத்மநாபன், ஆறுமுகம் ஆகியோர், வனத்தை உருவாக்குதல் குறித்த செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, பசுமைப்படை மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் சுஜித்ஜெயன் அலெக்ஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியை கலைச்செல்வி, ஏகதேவி, அன்பரசிஉள்ளிட்டோர் செய்திருந்தனர்.

