/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் நிலக்கரி துகள்கள் காரைக்காலில் கலெக்டர் ஆய்வு
/
சாலையில் நிலக்கரி துகள்கள் காரைக்காலில் கலெக்டர் ஆய்வு
சாலையில் நிலக்கரி துகள்கள் காரைக்காலில் கலெக்டர் ஆய்வு
சாலையில் நிலக்கரி துகள்கள் காரைக்காலில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 28, 2024 03:43 AM

காரைக்கால் : காரைக்காலில் சாலையில் நிலக்கரி துகள்கள் கொட்டி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்ட பகுதியை, கலெக்டர் மணிகண்டன் ஆய்வு செய்தார்.
காரைக்கால் வாஞ்சூர் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து ரயில் மற்றும் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரியில் அரியலூருக்கு நிலக்கரி ஏற்றி செல்லப்பட்டது.
காரைக்கால் அம்பாள்சமுத்திரம் வளைவில் வேகமாக சென்றதால் நிலக்கரி துகள்கள் சாலையில் சிதறியது. அந்த வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுந்து காயமடைந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, கலெக்டர் மணிகண்டன், விபத்து ஏற்பட்ட அம்பாள்சமுத்திரம் பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். எஸ்.பி., பாலச்சந்தர், சுப்ரமணியன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் உடனிருந்தனர்.
கலெக்டர் மணிகண்டன் கூறுகையில்., காரைக்காலில் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றிசெல்லும் வாகனங்களை போக்குவரத்து காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நிலக்கரி துகள்களை எடுத்து செல்ல துறைமுக நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலக்கரி ஏற்றிசெல்லும் வாகனங்கள் செல்லும் பாதைகளில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி இதபோன்று அலட்சியமாக நிலக்கரி எடுத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.

