ADDED : மார் 02, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தந்தை கண்டித்ததால், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோரிமேடு, இஸ்ரவேல் நகர், பெருமாள் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சேதுராமன், 20; மூலகுளம் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 27ம் தேதி சேதுராமன், கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததுடன், இரவு 10:30 மணிக்கு மேல் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததை ரவி கண்டித்தார். இதனால், மனமுடைந்த சேதுராமன், தனது அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிகின்றனர்.