/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை
/
கல்லுாரி மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை
ADDED : ஆக 03, 2024 04:31 AM
முக்கிய திட்டங்கள்:
l ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் முதல்வரின் புதுமை பெண் எனும் புதிய திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லுாரி மாணவிகள் 500 பேருக்கு, மின்சார ஸ்கூட்டர் வாங்குவதிற்கு வாகன விலையில் 75 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
l சுற்றுலாத்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தீம் பார்க், தங்கும் விடுதிகள், உணவகங்கள், நல மையங்கள் உள்ளிட்ட சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளுடன் மணப்பட்டு பகுதியில் பல்நோக்கு சுற்றுலா மையம் அமைக்க டெண்டர் விடப்படும்.
l புதுச்சேரி கடற்கரை தெற்கு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ. 60 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு அரண் அமைக்கப்படும்.
l நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 30.50 கோடி மதிப்பில் 1 எம்.எல்.டி., கொள்ளவு கொண்ட 7 உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
l லாஸ்பேட்டை பழுதடைந்த அரசு ஊழியர் குடியிருப்பிற்கு பதிலாக ரூ. 100 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
l அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து இளநிலை கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.