/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
/
ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
ADDED : செப் 01, 2024 03:30 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று 1ம் தேதி நடக்கும் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு தொகுதி-2; நேஷ்னல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி தேர்வு-1, ஆகியவற்றை 241 பேர் எழுத உள்ளனர்.
முத்தியால்பேட்டை, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில், ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு தொகுதி -2, இன்று காலை 9:00 முதல் 11:00 மணி வரை; மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை ஆகிய, மூன்று பிரிவுகளில் நடக்கிறது. இந்த தேர்வை மொத்தம், 111 பேர் எழுத உள்ளனர்.
அதேபோல நேஷ்னல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி தேர்வு -1, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை; மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை; என, இரு பிரிவுகளிலும் நடக்கிறது. இந்த தேர்வை மொத்தம், 130 பேர் எழுத உள்ளனர்.
புதுச்சேரி அரசானது, தேர்வர்களின் வசதிக்காக, புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரு தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
தேர்வு துவங்கும் நேரத்திற்கு, 30 நிமிடங்கள் முன்னதாக, தேர்வு மையத்தின் நுழைவு வாயில்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தேர்வர்கள் மையத்திற்கு நுழைய அனுமதி கிடையாது.