/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிஷன் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையர் எச்சரிக்கை
/
மிஷன் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையர் எச்சரிக்கை
மிஷன் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையர் எச்சரிக்கை
மிஷன் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையர் எச்சரிக்கை
ADDED : மே 24, 2024 04:02 AM

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர் களுக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று, காந்தி வீதியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் அதிகாரிகள் மிஷன் வீதியில் சாலையில், ஆக்கிரமித்துள்ள கடைகள், விளம்பர பேனர்களை மூன்று நாட்களில் அகற்றவேண்டும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
தவறினால் நகராட்சி மூலம் அகற்றப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் செயற்பொறியாளர் சுந்தராஜன், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, நகராட்சி வருவாய் அதிகாரி சதாசிவம், பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.